Sunday, May 29, 2011

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ .....(எங்கேயும் காதல் )


நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் ஜூலை வானம் ஜுவாலை மூட்டுதோ

நெஞ்சில்..

என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின்சாரல் தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்ப துகழ்கள் இன்பங்கள் பொழிகையில்

நெஞ்சில்..

ஒரு மௌனம் பறவும் சிறு காதல் பொழுது
கிழியில் விழையும் மொழியில் எதுவும் கவிதையடி
அசையும் இமையும் இசையில் எதுவும் இனிமையடி
விண் மார்பில் படரும் உன் பார்வை திறவும்
இதயம் புதரில் சிதறி சிதறி வழிவதேன்
ஓர் உதிரும் துளியில் உதிரம் முழுதும் நதிர்வது ஏன்

உருகாதே உயிரே விலகாதே மனதே
உன் காதல் வேரை கானவேண்டி
வானம் தாண்டி உனக்குள் நுழைந்த

நெஞ்சில்..

பசி ஏறும் இதழும் பசி ஏறும் விரலும்
இரதம் உடுத்து இறையை விறயும் நேரம் இது
உயிரின் முறையில் மயிரின் இழையும் நூரம் அது
ஒரு வெள்ளை திரையாய் உன் உள்ளம் திறந்தாய்
சிறுக சிறுக இரவை திருடும் தாரிகையே
விடியும் வரையில் விரலும் இதழும் தூரிகையே
விடியாதே இரவே முடியாதே கனவே
நீ இன்னும் கொஞ்சம் நீலகோரின் காதல் கானி துடிக்க துடிக்க

நெஞ்சில்..


இந்த  பாடலுக்கு இந்த இசைக்கு  என் வரிகள் : 

ஆண்:  காதல் காற்று எழுப்புதே
கவிதை ஒன்று படிக்குதே 
கவிதை இருதயம்  நுழையுதே 
என் மூச்சில் மீண்டும்  பிறக்குதே 

இரவின் கனவுகள் விடிந்தும்  தொடருதே....  
விடிந்தும் தொடர்ந்து  இம்சை செய்யுதே ....
 
உயிர் நோகுதே உடல்  தீயுதே   
கவிதை தீமூட்டி சிரிக்கிறதே.....  
என் கனவிலும் என் நினைவிலும்  
கவிதை நுழைந்து கலவரம் செய்யுதே ...... 

என் இரவின் இருளும் உன் இரவின்  இருளும் 
இணைந்து இருந்து விடிந்து   பிரிந்து துடிக்கிறதே.....
உறவு முடிந்து உருகி பிரிந்து அழுகிதே.....

பெண் : என் கவிதை பேசும் ...    
என் காதல் பேசும்  ....
இருந்தும் மௌனம் இரவை தொடர்ந்து நீள் கிறதா 
  விடிந்து பிரிந்து விடியல் அறிந்து அழுகிறதா 

ஆண்: அந்த மௌனம்  வேண்டும்... 
அந்த அழுகை வேண்டும் ...
அந்த துன்பம் மீண்டும் வேண்டும்  வேண்டும்... இரவே இரவே வந்துவிடு மீண்டும்....

பெண் : திருடாதே கள்வா...  நடிக்காதே  நடிகா... 
என் கனவை திருடி, கவிதை திருடி போவது ஏன் ?
உணவு மறந்து, உறக்கம் மறந்து திரிவது ஏன் ?

ஆண் : அடிபோடி கள்ளி, நடிக்காதே கள்ளி... 
உன் கனவை அனுப்பி என் கனவில் இணைத்து போனது ஏன்?
உன் கவிதை  அனுப்பி  காதல் பேச  வைத்தது ஏன் ?

பெண் : ஐயோ போடா... விலகி போடா... 
எனக்கொன்றும் இல்லை நடிக்கும் அவசியம்
தேடு தேடு கனவுடன் கவிதையை ....

ஆண்: காதல் காற்று எழுப்புமா?
கவிதை மீண்டும் படிக்குமா ?
கவிதை இருதயம்  நுழயுமா ?
என் மூச்சில் மீண்டும்   பிறக்குமா ?

இரவில் கனவுகள் மீண்டும் பிறக்குமா ?
விடிந்தும் தொடர்ந்தும் இம்சை செய்யுமா ?