Friday, June 29, 2012

மனிதா நீ சந்தர்ப்பவாதியாய்.....




காணும் உடலிலும்
பேசும் மொழியிலும்
அமுதொழுக பேசும்போது
மனிதனாய் நீ ஒருவன்தான்.....

சந்தர்ப்பவாதியாய்
காரியசித்தனாய்
குணம்மாற்றி பேசும்போது
கடவுளாய் நீ அவதாரபுருசனோ!

ஆடை பூட்டி, அணி பூட்டி
மகனை மணமகனாய்
மணமேடை ஏற்றும்போது
மனிதா நீ தகப்பன்தான்...

வசதி தரம் பார்த்து
வரதட்சணை வரை பார்த்து
விற்பனைவிலை குறிக்கும்போது
மனிதா நீ மாட்டுவியாபாரியோ!

காதல் மொழி பேசி
கவிதையாய் சிரித்துபேசி
கயிறு கட்டும்வரை
கன்னிக்கு நீ காதலன்தான்...

கவிதைகள் கட்டுகதை ஆகும்போதும்
கட்டிய கயிறு பிடித்து
கழுத்தை நெறிக்கும்போதும்
காதலா! இதுதான் காதலா?...

தலை தரை பார்த்து
தடுமாறி விழபார்த்து
அசைந்து போகும்போது
அவள் அழகுதான்....

பேச இடம் கொடுத்து
பின் பேசி பழகி
பித்தர்கள் ஆக்கும்போது
அட... அவள் தானா இவள்!?....

வார்த்தை வார்த்தையாய் வரி சேர்த்து
வரி வரியாய் கவிதை கோர்த்து
வக்கனையாய் பேசும்போது
நான் நல்ல மனிதன்தான்...

மனம் மயங்கும்போது
மனிதம் மறக்கும்போது
நானும் ஒருநாள்
சந்தர்ப்பவாதிதான்!