பெய்யும் மழை கவிதை பாடுது .
சிந்தி சிதறி இசையென தெறிக்குது.
என்னுள் இருக்கும் அவளின் இதயம்
என்னை விட்டு வெளியில் ஓடுது.
இசையும் கவியும் மழையாய் பெய்யுது.
அவளின் இதயம் அழகாய் ரசிக்குது.
அழகை ரசிக்கிறேன் ஆனாலும் தவிக்கிறேன்.
இதயம் இல்லாமல் வெற்றிடம் உணர்கிறேன்.
கடுங்குளிர் தழுவி காய்ச்சல் வந்தால் !
இடறி விழுந்து காயம் பட்டால் !
ஐயோ !அடைமழை வேண்டாம் . ஆதவன் எங்கே?
வெற்றிடம் வெறுக்கிறேன் வந்துவிடு இங்கே !
குரல் கேட்காததுபோல் ஏன் நடிக்கிறாய்!
ஆசையில் அழுத்தி அணைத்தது தவறா ?
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?
இல்லை, விலகியிருந்து பின் நெருங்கியது தவறா?
ஆதவன் வந்தபாடில்லை; அடைமழை நின்றபாடில்லை;
வெற்றிடம் வந்து அவள் இதயமும் புகவில்லை ;
இருக்கட்டும் இருக்கட்டும் , இதயம் நனையட்டும்;
இந்த வலி தந்த சுகம் இன்னும் நீளட்டும் ..................