Tuesday, September 11, 2012

ஒன்றாய் ஒருமைபட....



யாரோ நீ!
கண்களால் மோதுகிறாய்...
உன்னிரண்டு காந்தமா,?
என்னிரண்டு காந்தமா?

மோதும் போதெல்லாம்
உடைவது நானானேன்
உடைவது நானென்றால்
உண்ணிரண்டு காந்தம்தான்...

கண்ணொடு கவர்ந்திழு
காலம் போகும்முன்
அலைபாயும் என்மனம்
ஒன்றாய் ஒருமைபட....

Monday, September 3, 2012

சித்தர்கள் ராஜ்யம் (தோழியின்)

       சித்தர்கள் . ஏதோ சாமியார்கள், ஆன்மீகவாதிகள், மருத்துவ நூல்கள் எழுதியவர்கள் போன்ற சிற்சில தகவல்களையும் தாண்டி பிரமிக்க வைக்கும் தகவல் களஞ்சியம் தான் ''சித்தர்கள் ராஜ்யம்'' என்ற இணையதளம். 

       மிகவும் சிரமப்பட்டு தகவல்களை சேர்த்திருக்கிறார் அந்த இணையதளத்தை நடத்தும் 'தோழி'. 
வசியம், காயகற்பம், சித்தர்களை இன்றய விஞ்ஞானிகளுக்கும் முன்னோடிகளாக அறிமுகப்படுதுவது மேலும் கூடுவிட்டு கூடு பாய்வது, மந்திரகளின் உண்மையான செயல்பாடு விளக்கம் போன்ற தகவல்கள் மெய்சிலிர்க்கவைக்கக்கூடியவை. 


பதிவுகளின்
பிரமிப்பை நீங்களும் உணர


[url]www.siththarkal.blogspot.com [/url]


Friday, June 29, 2012

மனிதா நீ சந்தர்ப்பவாதியாய்.....




காணும் உடலிலும்
பேசும் மொழியிலும்
அமுதொழுக பேசும்போது
மனிதனாய் நீ ஒருவன்தான்.....

சந்தர்ப்பவாதியாய்
காரியசித்தனாய்
குணம்மாற்றி பேசும்போது
கடவுளாய் நீ அவதாரபுருசனோ!

ஆடை பூட்டி, அணி பூட்டி
மகனை மணமகனாய்
மணமேடை ஏற்றும்போது
மனிதா நீ தகப்பன்தான்...

வசதி தரம் பார்த்து
வரதட்சணை வரை பார்த்து
விற்பனைவிலை குறிக்கும்போது
மனிதா நீ மாட்டுவியாபாரியோ!

காதல் மொழி பேசி
கவிதையாய் சிரித்துபேசி
கயிறு கட்டும்வரை
கன்னிக்கு நீ காதலன்தான்...

கவிதைகள் கட்டுகதை ஆகும்போதும்
கட்டிய கயிறு பிடித்து
கழுத்தை நெறிக்கும்போதும்
காதலா! இதுதான் காதலா?...

தலை தரை பார்த்து
தடுமாறி விழபார்த்து
அசைந்து போகும்போது
அவள் அழகுதான்....

பேச இடம் கொடுத்து
பின் பேசி பழகி
பித்தர்கள் ஆக்கும்போது
அட... அவள் தானா இவள்!?....

வார்த்தை வார்த்தையாய் வரி சேர்த்து
வரி வரியாய் கவிதை கோர்த்து
வக்கனையாய் பேசும்போது
நான் நல்ல மனிதன்தான்...

மனம் மயங்கும்போது
மனிதம் மறக்கும்போது
நானும் ஒருநாள்
சந்தர்ப்பவாதிதான்!













Tuesday, January 31, 2012

வேரை மறந்த விழுதுகள்



பெற்ற மகன்கள் அழகு பார்த்து
பெண்ணவள் தன்னவன் முகம்கூட  மறந்தாள்;
பாவம் பதுமை முதுமையும் உடுத்தினாள்,
சிக்கன சேலையில் சிதைந்தும் கிடக்கிறாள்;

முதிர்ந்த உணர்வுகள்   உடலை நடுக்கியும்,
மூக்குக்கண்ணாடி கீறல்கள்  தடுத்தும்,
மூத்தமகன் அப்பா என்றழைக்க
மூன்று மாதமாக தகப்பன் தவிக்கிறான்;

அவனும் அவளும் எழுதிய கவிதைகள்,
அன்பெனும் ஆன்மிகம் அறிந்தே பிறந்தன;
காலங்கள் ஓடிட ஆன்மிகம் மறந்தன;
காதலின் கவிதைகள் இலக்கணம் பிழைத்தன;

இப்படி பிள்ளைகள் பிறக்கும் என
அன்னையும் பிதாவும் முன்னறியவில்லையே!
ஆண்டவன் அருள்வேண்டி ஆலயம் தொழுதும் ,
இரக்கமற்ற ஆண்டவன் அருள் தரவில்லையே!

நெஞ்சூட்டி வளர்த்த தாய்,
செஞ்சூட்டில் கருகும் முன்
வந்தொருமுறை  வசையாவது பாடுங்கள் ,
வேரை மறந்த விழுதுகளே!