Thursday, November 17, 2011

செய்த கர்மமே விதியென அறிந்தும்

உண்மையில் பிறப்பது ஞானியாகத்தான் !!
உயர்வும் தாழ்வும் வளரும் போதுதான்!!
வளரும் போதே ஞானி தேய்கிறான்.
அது தெரியாமல் எதையோ தேடுகிறான்!


பயம் இல்லை பணம் இல்லை
வஞஂசகம் இல்லை வாய்பேச்சுஇல்லை
போட்டியும் இல்லை பொறாமையும் இல்லை
உண்மையில் ஞானி பிறக்கும் பிள்ளை!

செய்த கர்மமே விதியென அறிந்தும்
பலனை தவிர்க்க பரிகாரம் தேடுகிறான்!
மனதின் மாயையில் உலகம் விரிந்தும
்மனதை ஏனோ மதிப்பிட மறுக்கிறான்!


இவனென்ன ஏதோ அறிவாளி போலவும்
நாமெல்லாம் ஏதோ அறியாதவர் போலவும
்இப்படி என்னை நீ பேசுவது புரியும்.
நானுமொரு தேய்ந்த ஞானிதான்!

எண்ணங்களுக்கும் கற்புண்டு ;இதயத்திற்கும் எய்ட்ஸ் வரும்;

பள்ளியில் ஒரு காதல் ,
பருவ கடைசியில் ஒரு காதல் ,
பணத்திற்கு ஒரு காதல்
கொஞ்ச ஒரு காதல்
கெஞ்ச ஒரு காதல் ,
உறவுக்குள் ஒரு காதல்,
உடலுக்கு ஒரு காதல் ......

இதுதான் சுதந்திரமா ?
இதுதான் பிறப்புரிமையா ?


எண்ணங்களுக்கும் கற்புண்டு ;
இதயத்திற்கும் எய்ட்ஸ் வரும்;

உண்மையான காதல்களே
உங்களுக்கு மட்டும் தான் சுதந்திரம்....

உணர்வில் உயிர்த்த அன்புகளே
உங்களுக்கு மட்டும் தான் சுதந்திரம்....

இரவு முழுதும் நடக்கும் கலவி

இவள் அவன் இனியவள்
இவன் காதல் பகிர்ந்தவள்;
அவன் நககீற்று கடிப்பவள்
அழகு மொழிபேசி கவிழ்பவள்;

இவள் அவன் இனியவன்
இரவில் கொஞ்சம் கொடியவன்;
அந்திசாய்ந்ததும் வந்து மோதியவன்
வந்து மோதியதும் வசனம் மறந்தவன்;


இரவும் நிலவும் கிடக்கும் தழுவி
இரவு முழுதும் நடக்கும் கலவி;
காற்று கூட புகவில்லை
ஆனாலும் அணைப்பு போதவில்லை;

இந்த பாவை கொண்ட மோகம்
இரவு கடந்து பகலில் நீளும்;
இந்த பாவை கண்ட தாகம்
கடலையும் முடித்து காற்றை குடிக்கும்;

காலம் நேரம் மறந்துபோச்சு!
ஆடைகள் எங்கோ தொலஞஂசு போச்சு!
கவிதைகள் நான்கு பிறந்தாச்சு!
ஏதோ கொஞ்சம் காமம் கடந்தாச்சு!