Friday, December 9, 2011

'தோல்வி என்பது இருப்பதால் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறோம்'

    தோல்வி  என்பது  மீண்டும்  ஒருமுறை  என்  உண்மையான  விருப்பம் என்ன என்பதை நான் பரிசீலிக்கும் வாய்ப்பாக தான்  இருக்க வேண்டும்.
    எதை ஆசைப்பட வேண்டும் . அது சரியா தவறா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். முதலில்  நாம் ஆசைபடுகிறோம். நமக்கு பிடித்த ஒரு பலனை எதிர்பார்கிறோம். அதற்காக கஷ்டப்பட்டு அதை அடைந்து சந்தொசப்பட்டுகொள்கிறோம் .  அல்லது பலனை அடைவதற்கு முன்னே  கஷ்டபடுவது போல் எதையோ செய்து  அதில் திருப்தி அடைந்து கொள்கிறோம்   அல்லது போகிறபோக்கில் ஆசையை மறந்து சூழ்நிலையும் சந்தர்பமும் தந்த சில கொடுக்கப்பட்ட ஆசைகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து அதில் சந்தோஷபட்டுகொள்கிறோம்.நான்கு விடைகளில் சரியான ஒன்றை தேர்ந்தெடுத்து ஒரு மதிப்பெண் பெறுவது போல் ....
     இந்த  'அல்லது வரிசை'யை மேலும்  நீட்ட தெரிந்தவர்கள் கருத்துரையில் கொஞ்சம் நீட்டி காட்டவும். தெரிந்துகொள்கிறேன்.
      இப்படி செயற்களம் வெவ்வேறு விதத்தில் வெவ்வேறு சுவாரசியங்களுடன் நீள்கிறது. ஆசைப்பட்ட எல்லோரும் எந்திரம் போல் சரியாக செய்யவேண்டியதை செய்து முடித்தால்   எப்படி இருக்கும்?! கற்பனை செய்து  பார்த்தால் .... ஐயோ!  ஒரு சுவாரசியமஇலாத உலகம் நாம் முன் விரிந்து கிடக்கும். நல்ல வேலை நாம் அன்றாட செயற்கள பயணத்தில்  ''தோல்வி என்பது இருப்பதால் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறோம்''.  நல்ல வேலை இப்போதாவது எனக்கு இது புரிந்துவிட்டது. நிம்மதியாக உள்ளது. ஒருவித பெருமிதம். இப்போது நான் ஒவ்வொரு நொடியும் சரியாக பயணிக்கும் நேரத்தை கண்டு ஏளனமாக சிரிக்கிறேன் ....


    அது சரி ! இப்படி ஏளனமாக சிரிப்பதற்கு நான் சரியனவனா ...? நான் முதலில் வெல்லவே ஆசைப்பட்டேன் ... ஆனால் இப்போது தோற்றத்தை எண்ணி பெருமிதம் கொள்கிறேன் . தோல்வியை நியாயப்படுத்துவது  போல் அல்லவே இருக்கிறது.! என்னை நானே ஏமாற்றிகொள்வது போல் அல்லவா இருக்கிறது ... ''இப்போது என்னை பார்த்து அதன் விருப்பப்படி சரியாக இயங்கும் நேரம் ஏளனமாக சிரித்தது '' .....

வெறும் வெற்றிகளை மற்றும் கொண்ட சுவாரசியமில்லாத உலகமும் பிடிக்கவில்லை .... நேரத்தின் ஏளன சிரிப்பும் எனக்கு எரிச்சலை தருகிறது ....யோசிக்க வேண்டிய விசயம்தான் .

 யோசித்த பிறகு ஒரு தெளிவு கிடைத்தது.நான் ஒன்றும் ''நேரம் '' இல்லையே ! நான் அனைத்து ஆற்றலும் கொண்டவனாக இருந்தாலும் சராசரியனவானாக இருந்தாலும் பலவீனனாகாக இருந்தாலும் ''நேரம் '' என்ற அந்த விதிக்கு அல்லது அந்த தத்துவத்திற்கு உடன்பட்டுதான் ஆகவேண்டும் ....நேரத்தின் சரியான வரையறை எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது. பிரபஞ்சத்தின் ஒவ்வொன்றும் ''நேரம்'' என்பதை ஏற்று உடன்படுகிறது. எதுவாக இருந்தால் என்ன, நான் நேரத்திற்கு உடன்பட்டவன் தான் ....
நேரத்திற்கு உடன்பட்டவன் என்ற பட்சத்தில் நான் எனது செயற்கள பாதையில் என்னை போன்றோரின் பங்கை தவிர்க்க முடிவதில்லை.
அதேபோல் நானும் எதோ ஒரு வகையில் மற்றவரின் பாதையில் பங்கெடுத்துவிடுகிறேன் .
ஆக எனது வெற்றி அல்லது தோல்வி என்ற விளைவில் என்னை போன்றோரின் பங்கும் நேரத்தின் பங்கும் இருப்பதால் வெற்றியை எண்ணி மகிழ்வதும், தோல்வியை எண்ணி வருந்துவதும் பொருளற்ற முட்டாள்தனமாக புரிகிறேன்.
 அதே வேலையில் 'நேரம்' என்ற தத்துவத்தின் விளையாட்டை கண்டு ரசிக்க பழகிகொண்டால் உண்மையில்  தோல்வியும் வெற்றியும் வெறும் அனுபவமாக ஆனால் நல்ல சுவாரசியமான அனுபவமாக மாறிவிடும் அல்லவா!
இதை புரிந்துகொண்டதால் நேரம் எனக்கு தரப்போகும் சுவாரசியமான வெற்றி அல்லது தோல்வியை அறிய நான் ஆவலாகிவிட்டேன்.  இனி நான் ஏமாறபோவதும் இல்லை , எந்த முயற்சியையும் தயங்கி வெறுத்து கைவிடபோவதும் இல்லை .......

No comments:

Post a Comment